கௌதமி மகளை என்ன செய்தார் கமல்? 13 வருட காதலை தூக்கி எறிந்ததன் காரணம்!
Author: Rajesh9 January 2024, 8:46 am
உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.
திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார். அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். கிட்டத்தட்ட கௌதமி – கமல் ஹாசன் 13 வருடங்கள் திருமணம் செய்யாமலே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள். அப்படி இருந்தபோது கௌதமி திடீரென ஏன் கமல் ஹாசனை பிரிந்தீர்கள் என பேட்டி ஒன்றில் கேட்டதற்கு,
“நான் என்னுடைய மகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகத்தான் தான் கமல் ஹாசன் உடனான உறவை முறித்துக்கொண்டு அவரை பிரிந்தேன். இத்தோடு போதும்…தொடர்ந்து இது பற்றி கேள்வி எழுப்ப வேண்டாம் எனவும் முட்டுக்கட்டை போட்டு விட்டார் கௌதமி. கௌதமின் இந்த பதிலை விவாதம் செய்ய ஆரம்பித்த நெட்டிசன்ஸ், கமல் ஹாசன் கௌதமின் மகளை அப்படி என்ன செய்துவிட்டார்? உண்மையில் என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் கண், காது , மூக்கு வைத்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.
கௌதமி கமல் ஹாசனை பிரிந்தது மட்டும் அல்லாமல், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் தோற்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து பரபரப்பை கிளப்பினார் கௌதமி. இவ்வளவு வெறுப்பிற்கு என்ன காரணம்? உண்மையில் என்ன நடந்திருக்கும் என மில்லியன் டாலர் கேள்வி நெட்டிசன்ஸ் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் மீண்டும் சூடு பிடித்துள்ளது.