கமல் சொன்ன யுக்தி; டைட்டிலை வெல்லப்போவது இவர்தான்.. உண்மையை உடைத்த விசித்ரா..!

Author: Vignesh
9 January 2024, 10:15 am

விசித்ரா முன்பு போல் , பழைய மாதிரி மீண்டும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க அவருக்கு ஆர்வம் இல்லையாம். தன்னுடைய உடல்வாகுக்கு ஏற்ற மாதிரி, போலீஸ் அல்லது தொழிலதிபர் போன்ற வேடங்களில் நடிக்க அவர் ஆர்வமாக இருக்கிறாராம்.

1990- களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை விசித்ரா. திருமணத்துக்குப் பிறகு வியாபாரத்தில் பிஸி ஆனதால் நடிப்புக்கு முழுக்கு போட்ட விசித்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

vichithra-updatenews360

தமிழில் கவர்ச்சியில் மட்டுமின்றி குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியவர் நடிகை விசித்ரா. ரசிகன், முத்து, வீரா என இவர் நடித்த வெற்றிப்படங்கள் அதிகம். 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பட வாய்ப்புகளைத் தேடும் பணியை தொடங்கிய அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராசாத்தி சீரியலில் நடித்து இருந்தார்.

இதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரீ கொடுத்தார். அதனை தொடர்ந்து, பிக் பாஸ் போட்டியில் களமிறங்கி சில வாரங்கள் மட்டுமே தாக்குப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட நூறு நாட்கள் வரை வீட்டிற்குள் இருந்து உள்ளார். தற்போது, கடந்த வாரம் மக்களிடமிருந்து குறைவான வாக்குகளை பெற்று வெளியேற விசித்ரா தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்.

vichithra-updatenews360

இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. இந்நிலையில், பிக்பாஸில் வெளியேறிய பின் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் எல்லோரும் யார் வின்னராக வருவார் என கேட்கிறார்கள். என்னை பொறுத்த வரைவில் மாயாக தான் வெற்றியாளர் என தோன்றுகிறது. பிக்பாஸ் வீட்டில் அவரை பார்த்ததால் கூறுகிறேன் என பேசியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ