தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. தேர்தல் குறித்து இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 11:29 am

தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. தேர்தல் குறித்து இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிட்டு வருகின்றன. அ.தி.மு.க. சார்பிலும் தேர்தல் நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் கூட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டத்தில், பிரசார யுக்திகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில் பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் முன்னாள் அமைச்சர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அதிமுக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலின்போது மேற்கொள்ள வேண்டிய கள நடவடிக்கைகள், பிரசார அணுகுமுறைகள், அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள், அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைக்க விரும்பும் கட்சிகள், அதற்கான வியூகங்களை அமைப்பது, தொண்டர்களின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்திற்கு முன்னதாக கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!