திருச்சியில் குறைவான பேருந்துகளே இயக்கம்.. பொதுமக்கள் கடும் அவதி : பணிமனையில் போலீஸ் பாதுகாப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 12:11 pm

திருச்சியில் குறைவான பேருந்துகளே இயக்கம்.. பொதுமக்கள் கடும் அவதி : பணிமனையில் போலீஸ் பாதுகாப்பு!!

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு ஊதியர்களுக்கான ஒப்பந்த பலன் உயர்வை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு, இறந்த தொழிலாளருக்கு வாரிசுக்கு வேலை கொடுக்க வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் தொடங்க வேண்டும், சம்பள உயர்வு மற்றும் புதிய பென்ஷன் திட்டத்தை கலைத்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்

இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ரவிசங்கர் தொழிலாளர் சங்கத்தின் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார் இப் பேச்சு வார்த்தையில் சில கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்து சங்கங்கள் அறிவித்தது.
அதன்படி நேற்று சென்னை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சியில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருச்சியில் 12க்கு ஏற்பட்ட டெப்பாக்களும் திருச்சி மாவட்டத்தில் முசிறி, துறையூர், துவாக்குடி, மணச்சநல்லூர், உப்பிலியாபுரம், மணப்பாறை, லால்குடி
உள்ளிட்ட டெப்போக்களில் இருந்து 938 பேருந்துகளில் 50 சதவீத பேருந்து மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு டெப்போகளில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தாலும் பயணிகள் செல்வதற்கான பேருந்துகள் குறைவாக உள்ளதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருச்சி பொறுத்தவரை தனியார் பேருந்துகளை இயக்கப்படுவதால் அதில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. மேலும் வெளியூர் செல்லும் பயணிகள் முன்னே திட்டமிட்டு தங்கள் பயணத்தை மேற்கொண்டதால் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. டெப்போகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu