கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் 28ஆம் ஆண்டு விழா : பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 4:00 pm

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் 28ஆம் ஆண்டு விழா : பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் 28ஆம் ஆண்டு விழா கொடிசியா அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில், மாநகராட்சி பூங்காக்களில், 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச கண், பல் பரிசேதனை முகாம் நடத்துவது, சங்க உறுப்பினர்களுக்கு நடப்பாண்டு முதல் மருத்துவ காப்பீடு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குவது, அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் சமமான முறையில், வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த விழாவில் கோவை ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் தலைவர் உதயகுமார், KCP Infra Limited நிறுவனர் மற்றும் ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளருமான K.சந்திரபிரகாஷ், பெருளாளர் அம்மாசையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சதீஷ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் விஜய் டிவியின் புகழ்பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பாடகர்கள் சந்தோஷ் ஹரிஹரன், மாளவிகா, நித்ய ஸ்ரீ ஆகியோர் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  • Redin Kingsley and Sangeetha Announce Pregnantவீட்டுல விஷேசம்… குட்டி கிங்கிஸ்லி Coming Soon : வெளியான வீடியோ!
  • Views: - 314

    0

    0