4 வயது மகனை துடிதுடிக்கக் கொன்ற AI நிறுவனத்தின் பெண் CEO… சூட்கேஸில் கிடந்த சடலம் ; கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
9 January 2024, 4:40 pm

4 வயது மகனை கொன்று சூட்கேஸில் வைத்து சடலத்தை எடுத்துச் சென்ற பிரபல நிறுவனத்தின் சிஇஓவை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் தலைநகர் பெங்களூரூவில் Mindful AI LAB எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சுச்சனா சேத். 39 வயதான இவர் தனது கணவனை விட்டு பிரிந்து 4 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

இவர் வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுச்சனா தனது மகனுடன் தங்கிருந்தார். இரண்டு நாட்கள் அங்கு தங்கி விட்டு, ரூமை காலி செய்து விட்டு சென்றுள்ளார். வரும் போது மகனுடன் வந்த சுச்சனா, தற்போது தனியாக செல்வதால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர்.

பின்னர், அவர் தங்கியிருந்த அறையில் சோதனை செய்த போது, சுவரில் ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக சித்ரதுர்கா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், ஓட்டல் நிர்வாகத்தின் உதவியுடன் சுச்சனா பயணித்த கால் டாக்ஸி ஓட்டுநருக்கு தொடர்பு கொண்டு, அருகே உள்ள காவல்நிலையத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தினர். அதன்படி, ஓட்டுநரும் காவல்நிலையத்திற்கு செல்ல, போலீசார் சுச்சனாவை கைது செய்தனர்.

பின்னர், அவரிடம் இருந்த சூட்கேஸை போலீசார் பரிசோதனை செய்ததில், அதில் மகனின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து அவரிடம் விசாரித்தனர். அதில், விவகாரத்தான தனது கணவர், குழந்தையை சந்திக்க விடக் கூடாது என்பதற்காக இந்தக்கொலையை அரங்கேற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 516

    0

    0