பெண்களை பாலியல் பண்டமாக நினைத்து துன்புறுத்துகிறார்கள் – நடிகை கங்கனா வேதனை!

Author: Rajesh
9 January 2024, 6:17 pm

பாலிவுட் நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகை கங்கனா ரனாவத் அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய இவர் 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி திறமையின் மூலம் மட்டுமே முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார். தமிழில் ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

ஆனால், பாலிவுட்டில் ஆளுமை படைத்தது வரும் பல வாரிசு நடிகர், நடிகைகளின் சதி செயல்களால் அவரை தொழில் ரீதியாக திட்டமிட்டு கெடுத்து வருகிறார். இதனை அறிந்த கங்கனா மீடியாக்களில் வெளிப்படையாக நேபோட்டிசம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதனால் கரண் ஜோகர் , பட் குடும்பம் உள்ளிட்டவர்கள் கடுங்கோபத்திற்கு ஆளாகினர்.

கங்கனா பாலிவுட்டின் பிரபல நட்சத்திர நடிகரான ரித்திக் ரோஷனை காதலித்து அவருடன் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தார். பின்னர் சில வருடங்கள் கழித்து இருவரும் பிரிந்துவிட்டார். ரித்திக் ரோஷனுடன் இருக்கும் வரை அவர் பாதுகாப்பாக இருந்தார். அவரை பிரிந்த பின்னர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் சர்ச்சையான விஷயங்கள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் கங்கனா ரனாவத்,

அந்தவகையில் தற்போது ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். ஆம், இணையவாசி ஒருவர் கங்கனாவின் தேஜஸ் படத்தைப் பார்த்தேன். படம் நன்றாக இருக்கிறது. கங்கனா நடித்த சிறந்த திரைப்படம் இது தான் ஆனால் இப்படம் ஏன் சரியாக ஓடவில்லை என்று எனக்கு தெரியவில்லை. கரண் ஜோஹர் மற்றும் சிலர் அவரை அழிக்க நினைக்கிறார்கள் என்று பதிவிட்டிருந்தார்.

அதி பார்த்ததும் பதிலளித்த கங்கனா, நீங்கள் சொல்வது கிட்டத்தட்ட சரியே….நிறைய பணங்களைச் செலவளித்து என் படங்களுக்கு எதிராக சில வேலை செய்கிறார்கள். நான் கடுமையாகப் போராடி வருகிறேன் . ஆனால் பெரும்பாலான பார்வையாளர்கள் கூட பெண்களை பாலியல் பண்டமாகக் கருதி அடித்து துன்புறுத்துவது போன்ற படங்களைத்தான் ஊக்கப்படுத்துகிறார்கள். எனக்கு அது வேதனையாக இருக்கிறது. இதுபோன்ற படங்கள் பெண்கள் முன்னேற்றத்தை பாதிக்கும் என்றார். அவர் சொல்வது ரன்பீர் கபூர் ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படம் தான். அதைத்தான் மறைமுகமாக கூறுகிறார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…