தேவையின்றி சிவில் பிரச்சனைகளில் தலையிடக் கூடாது… மீறினால்….. போலீஸாருக்கு ஏடிஜிபி போட்ட கண்டிப்பான உத்தரவு!!

Author: Babu Lakshmanan
10 January 2024, 9:10 am

சிவில் பிரச்சனைகளில் போலீசார் தேவையின்றி தலையிடக் கூடாது என்று காவல்துறைக்கு ஏடிஜிபி அருண் அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார்.

நிலம், வீடு மற்றும் பணப் பிரச்சனைகளில் போலீஸார் தேவையில்லாமல் தலையிடக் கூடாது என்று நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், சில பிரச்சனைகளில் காவல்துறையினர் தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்ற சூழலில், மக்கள் போலீசாரின் உதவியை நாடுகின்றனர். அப்போது, சட்ட விதிகளை போலீசார் மீறுவதாக புகார்கள் எழுகின்றன.

இந்த நிலையில், சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் அதிரடி உத்தரவை போட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியதாவது:- பணத்தகராறு, சொத்து தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் போலீசார் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். தலையிட வேண்டிய சூழல் வந்தால் மாவட்ட எஸ்.பி அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும். மீறினால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும், என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • Aishwarya Rajinikanth upcoming project ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!