நிக்சன் விஷயத்துல ஒரு முடிவோட தான் வந்து இருக்கேன்.. பெண் போட்டியாளர் கொடுத்த டுவிஸ்ட்..!

Author: Vignesh
10 January 2024, 10:56 am

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7 சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது வரை பரபரப்புக்கு குறைவில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

சமீபத்தில் நிக்சன் அர்ச்சனாவுக்கிடையே பிக் பாஸ் வீட்டில் கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது அர்ச்சனா வினுஷா குறித்து பேச தொடங்கியதும், நிக்சன் சும்மா வினுஷா வினுஷான்னு சொன்னா சொருகீருவேன் என்று மோசமாக பேசியதெல்லாம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. நிக்சனின் பேச்சுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

bigg boss 7 tamil-updatenews360

இந்நிலையில், அனன்யா மற்றும் வினிஷா தேவி இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர். 70 கேமராக்கள் முன்பு தன்னை அசிங்கப்படுத்தி பேசியதற்கு வெளியில் சென்றவுடன் கால் செய்து நிக்சன் மன்னிப்பு கேட்டதாகவும், அப்போது உச்சகட்ட கடுப்பிலிருந்த வினிஷா 70 கேமரா முன்னாடி நீ அந்த விஷயத்தை சொல்லி பேசின நீ இப்ப அதே 70 கேமரா முன்னாடி தான் நீ மன்னிப்பு கேட்கணும் என்று தெரிவித்துவிட்டாராம்.

bigg boss 7 tamil-updatenews360

ஆகையால், பிக் பாஸ் சீசனில் இறுதி நாட்களில் இதை பேசிக் கொள்வோம் எனக்கூறி வினுஷா போனை கட் செய்துவிட்டாராம். இவரின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டைட்டில் வின்னர் யார் என்ற குழப்பத்தில் இருக்கும் பொழுது இப்படி ஒரு டுஸ்டை வினிஷா கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படவில்லை என தெரிவித்து வருகின்றனர்.

  • Famous Malaysian singer commits suicide? Tragic end with mother!! பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!