எமனாக வந்த கழிவு நீர் தொட்டி.. விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் : நொடியில் நடந்த விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2024, 9:11 pm

எமனாக வந்த கழிவு நீர் தொட்டி.. விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் : நொடியில் நடந்த விபரீதம்!!

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு கிருஷ்ண பிரியன் 10. யாம் என்கிற யாம்நாத் 8 வயது.

இரண்டு மகன்கள் இருந்த நிலையில் மூன்றாம் வகுப்பு படித்த யாம்னாத் தனது அண்ணன் கிருஷ்ணப்பிரியனுடன் வீட்டின் அருகே உள்ள தனது நண்பர்களுடன் வீரமாமுனிவர் தெருவில் விளையாட சென்ற போது வீட்டின் படிகட்டு அருகே உள்ள கழிவு நீர் தொட்டி ஒன்று கோணிப்பை போட்டு மூடப்பட்டிருந்த நிலையில் தவறி உள்ளே விழுந்ததில் அதில் சிக்கிக் கொண்டார்.

இது குறித்த தகவலை அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தெரிவித்ததை தொடர்ந்து செங்குன்றம் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கழிவு நீர் தொட்டியில் இருந்த சிறுவனை மீட்டு அனுப்பி வைத்த போது சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்ததை தொடர்ந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடலை அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து செங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் நண்பர்களுடன் விளையாடச் சென்றபோது கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!