தற்கொலை செய்ய முயற்சி?.. அட்ஜெஸ்ட் செய்து கணவரை பிரிந்த பிரபல சீரியல் நடிகை உருக்கம்..!
Author: Vignesh11 January 2024, 10:25 am
பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான். பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார்.
இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடிகை கிருத்திகா நடித்து இருந்தார்.
இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். இவர், அடிக்கடி இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தும் வருகிறார்.
சமீபத்தில் அடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கிருத்திகா தனது விவாகரத்து குறித்தும் மகன் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், தனக்கு எட்டு வருடங்களுக்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டதாக கூறியுள்ளார். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் 83 கிலோ எடை இருந்தேன். அந்த சீரியலில் அக்கா கதாபாத்திரம் என்பதால் தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.
ஆனால், என் கணவர் என்னுடைய உடம்பை பார்த்து எப்படி இருக்க பெருசா இருக்க என்று உடல் எடையை வைத்து சண்டை போட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாக இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்து விட்டோம் என்று கிருத்திகா பகிர்ந்திருந்தார். மேலும், தனக்கு ஒரு மகன் இருப்பதால் யாராவது தந்தை பற்றிய விவரமும் கேட்டால் அவன் மனம் கஷ்டப்படும்.
ஆனால், தற்போது அந்த கவலை இல்லை என்றும், தனது அண்ணன் இவனுக்கு அப்பா ஸ்தானத்திலிருந்து வழிநடத்தி வருவது வருவதாகவும், தன்னுடைய அண்ணனுக்கு தன் மகனை தத்து கொடுத்து இருப்பதாகும். அதனால், தனக்கு எந்த கவலையும் தற்போது இல்லை என்று கிருத்திகா தெரிவித்து இருந்தார்.
மேலும் பேசுகையில், ஒன்பது மாதம் கர்ப்பமாக இருக்கும் போது முந்தானை முடிச்சு சீரியல் நடித்தபோது, மகன் பிறந்த போது அவர்கள் வேறு நடிகையை எனக்கு பதில் நடிக்க வைத்தனர். மூன்று மாதங்கள் ஓய்வு தேவைப்பட்டது. அதையும் தாண்டி எனக்கும் கணவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. குடும்பத்தில் சண்டை என்று சென்று கொண்டே இருந்தது. அம்மா சரியில்லை என்று கூறியதும், நானே முடிவெடுத்து விட்டேன். அம்மாவை யாரிடம் விட்டுக் கொடுக்க மாட்டேன். 4 வருடம் அட்ஜெஸ்ட் செய்து வாழ்ந்து வந்தேன்.
இனி இவர் நமக்கு தேவையில்லை என்று முடிவு எடுத்தேன். அவரை தப்பு சொல்லவில்லை. அவரை குறை சொல்லவும் இல்லை. அவரையும் என்ன நடந்தது என்று கேட்டால் தெரியும் என்று பலர் என்னையும் விமர்சித்தார்கள். இப்போது, நான் நன்றாக இருக்கிறேன். இதைப்பற்றி என் உறவினர்களிடம் கூறவில்லை. நானும் அவரை அடித்திருக்கிறேன் அவரும் என்னை அடித்திருக்கிறார். உமா மகேஸ்வரி என்ற எனது பெயரை சீரியல் நடித்த பின்பு கிருத்திகா என மாற்றிக் கொண்டேன். மகன் பிறந்த இரண்டாவது மாதத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்.10 நாட்கள் ஐசியூவில் இருந்தேன். இது உமாமகேஸ்வரி என்று தான் மீடியாவில் செய்திகள் வந்தது. விமர்சிப்பவர் என் வாழ்க்கைக்குள் வந்து பார்த்தால் தான் தெரியும், என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று நடிகை கிருத்திகா அண்ணாமலை தெரிவித்துள்ளார்.