ஆளுங்கட்சி உறுப்பினரே எதிர்க்கட்சி போல பேசலாமா? அடிப்படை வசதி கேட்ட மண்டல தலைவருக்கும் மேயருக்கும் இடையே மோதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2024, 6:48 pm

ஆளுங்கட்சி உறுப்பினரே எதிர்க்கட்சி போல பேசலாமா? அடிப்படை வசதி கேட்ட மண்டல தலைவருக்கும் மேயருக்கும் இடையே மோதல்!!

வேலூர் மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மேயர் சுஜாதா,துணை மேயர் சுனில், ஆணையர் ஜானகி தலைமையில் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

அப்போது ஒன்றாவது மண்டல குழு தலைவர் பேசுகையில், எனது மண்டலத்தில் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை, மின் விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என கேள்வி எழுப்பினார். 

இதற்க்கு பதில் அளித்து பேசிய (ஆவேசமாக) மேயர் சுஜாதா, ஒரு ஆளும் கட்சி உறுப்பினரே எதிர்கட்சி போல் எப்போதுமே திமுக அரசை குறை கூறி பேசி வருகிறார். அரசை அவமானப்படுத்துவது போல் பேசுரிங்க இது சரியல்லா என பேசினார்.

இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியதால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. பின்னர் தனக்கு அவையில் உரிய மரியாதை இல்லை என வெளியேற முயற்சித்தார். 

பின்னர் ஒன்பதாவது வார்டு அதிமுக உறுப்பினர் ரமேஷ் பேசுகையில், எனது வார்டில் 2 கோடி ரூபாய் வரை வரி வசூல் செய்யப்படுகிறது அதை என்னதான் பண்றிங்க ஆனால் இதுவரை 2 1/2 ஆண்டுகளாக எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேயரை கேட்டால் குழந்தை மாதிரி நடந்து கொள்கிறார் மாற்றி மாற்றி பதில் சொல்கிறார்.

இரண்டரை ஆண்டு ஆகியும் புதியதாக வந்த மேயர் அப்படியே தான் இருக்கிறார் என பேசினார். அப்போது மாநகராட்சி தேர்தல் முடிந்து இரண்டரை ஆண்டு ஆகவில்லை அதிமுக உறுப்பினர் பொய்யான தகவலை சொல்வதாக கூறி அதிமுக உறுப்பினரை திமுக உறுப்பினர்கள் அமர சொன்னதால் இரு கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக உறுப்பினர் பேச முயற்சித்த போது அவரிடம் இருந்து மைக்கை பிடுங்க திமுக உறுப்பினர்கள் முயற்சி செய்தனர். இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, 

வார்டில் மேற்கொள்ளப்படாத பணிகள் குறித்து கேள்வி எழுப்ப அதற்கு உரிய பதில் கிடைக்காததால் அதிமுக அதிமுக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவுக்கு பிறகு ஏழு அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடுடப்பு செய்தனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…