இப்படி இருந்தா பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடுறது..? தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு…

Author: Babu Lakshmanan
13 January 2024, 11:29 am

இப்படி இருந்தா பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடுறது..? தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு…

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.46,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து ரூ.5,845 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று ரூ.50 காசுகள் உயர்ந்து 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.78,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

.

  • BTS Jin Harassment Incident உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!