சாதுக்கள் மீது கொலைவெறி தாக்குதல்… ED முதல் சாதுக்கள் வரை பாதுகாப்பில்லாத நிலை ; மம்தாவுக்கு பாஜக கடும் விமர்சனம்

Author: Babu Lakshmanan
13 January 2024, 1:07 pm

மேற்கு வங்கத்தில் சாதுக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கம் – புருலியா மாவட்டத்தில் சாதுக்கள் மீது ஒரு மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக ஐடி குழும தலைவர் அமித் மாலிவியா, “மேற்கு வங்கத்தில் திரிணாமுல காங்கிரஸ் கட்சி தொடர்புடைய குற்றவாளிகளால் சாதுக்கள் தாக்கப்பட்டுள்ளனர். மம்தா ஆட்சியில் ஷாஜஹான் ஷேக் ஆகிய பயங்கரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு கிடைக்கிறது. மேற்குவங்கத்தில் இந்துவாக இருப்பது குற்றம்,” எனக் கூறினார்.

அதேபோல, மேற்குவங்கத்தில் விசாரணை அமைப்புகள் முதல் சாதுக்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

  • seeman told that the scenes which are indicating mullaiperiyar dam issue கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்