அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கிரீன் சிக்னல்.. காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan13 January 2024, 1:26 pm
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கிரீன் சிக்னல்.. காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 19ஆம் தேதி அன்று ஆர்.கே.நகர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அதிமுக சார்பில் வழங்க உள்ளதாகவும் இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்க மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து அதிமுக ஆர்.கே.நகர் நிர்வாகி நித்தியானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
அதில் ஒவ்வொரு ஆண்டும் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு காவல்துறை மறுத்துவிட்டனர். இதனால் திலகர் நகர் பகுதியில் நடந்த அனுமதி கேட்கப்பட்டது அதற்கும் காவல்துறை மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் இது போன்ற நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி இந்த இரண்டு இடங்களிலும் இல்லாமல் தண்டையார் பேட்டையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.