எல்லாமே உண்மையா?.. கமலை மாயாவுடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விஜய் டிவி பிரபலங்கள்..!(வீடியோ)

Author: Vignesh
13 January 2024, 4:00 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்களை வைத்து தான், இதற்கு முன் நடந்த சீசன்களின் போட்டியாளர்களை ட்ரோல் செய்து வந்தனர்.

ஆனால், இந்த சீசனில் முதல் முறையாக கமலஹாசனை தான் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் டிவியை சேர்ந்த புகழ் மற்றும் குரேஷி இருவரும் மேடை ஒன்றில் கமல் மற்றும் மாயா இருவரையும் இணைத்து சர்ச்சைக்குரிய வகையில் ட்ரோல் செய்தனர்.

maya

அந்த வீடியோவில், குரேஷி கமல் போல் மிமிக்ரி செய்ய புகழ் ஒவ்வொரு கேள்வியாக கேட்கிறார். உங்களுக்கு சென்னையில் பிடித்த இடம் என்ன என்று கேட்டால் மாயாஜால் எனக் கூறினார். பிடித்த படம் மாயாபஜார், தமிழ்நாட்டில் பிடித்த இடம் மாயவரம் எனக் கூறுகிறார். இப்படி கமலஹாசனுடன் மாயாவை இணைத்து ட்ரோல் செய்யும் விதமாக புகழ் மற்றும் குரேஷி பேசியது வைரலானது. அதாவது, வீடியோ வைரலான நிலையில், அந்த வீடியோ அநாகரிகமாக இருந்ததாக கூறி ரசிகர்கள் பலரும் புகழ் மற்றும் குரேஷியை வறுத்தெடுத்தனர்.

  • Good Bad Ugly Teaser தரமான சம்பவம்…விஜய் ரெக்கார்டை தூக்கி வீசிய ‘குட் பேட் அக்லி’.!