சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை.. குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே வந்த பாஜக பிரமுகர் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2024, 7:53 pm

சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை.. குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே வந்த பாஜக பிரமுகர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பார்வதிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார் இவர் கோட்டாறு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக தெரிகிறது.

மேலும் பெண் மருத்துவரின் செல்போன் மூலமாகவும் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகரித்ததால் வேதனை அடைந்த பெண் மருத்துவர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரிடம் பண மோசடியில் ஈடுபட்டது உட்பட ஜெயக்குமார் மீது பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன 2022 ஆம் ஆண்டு இவர்கள் மீது குண்டர் சட்டம் வாய்ந்த நிலையில் நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகளில் செயல்பட்ட இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்து பாஜக பிரமுகராக வலம் வந்து கொண்டிருந்தார் இந்நிலையில் பெண் மருத்துவர் அளித்த பாலியல் தொடர்பான புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

  • Pushpa 2 HD Release புஷ்பா 2 படக்குழுவுக்கு இடியாய் இறங்கிய செய்தி… வசூலை பதம் பார்த்த HD!
  • Views: - 397

    0

    0