பட்டியலின மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டதா? தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2024, 2:37 pm

பட்டியலின மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டதா? தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?!

திருச்சி தேசிய சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இளங்களை மூன்றாம் ஆண்டு (பட்டியலின) மாணவருக்கு சக மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர் பல்கலைக்கழகத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் இது குறித்து முழுமையாக விசாரணை செய்ய 3உதவி பேராசிரியர்கள் கொண்ட குழுவை பல்கலைக்கழகம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் புகார் கொடுத்த மாணவர் தனது நண்பர்கள் விளையாட்டாக பேசி கொண்டதால் புகார் கொடுத்தாக கூறி புகாரை திரும்ப பெறுவதாகவும் கூறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், புகார் கொடுத்த மாணவரை ஏன் புகார் கொடுத்தாய் ? என மாணவர்கள் மிரட்டியதால் புகாரை திரும்ப பெற்றாரா? அல்லது புகாரே பொய்யான புகாரா என்பது குறித்து முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்ததான எந்த புகார் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

  • Vijay TV VJ Priyanka's 2nd marriage... Viral video!விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!