விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகள்… 1 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் வசூல் : போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதிரடி!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2024, 5:39 pm

விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகள்… 1 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் வசூல் : போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதிரடி!

பொங்கல் பண்டிகைப்பட்டியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பொதுமக்களிடம் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசுலிப்பதாக புகார் எழுந்த நிலையில், ஆம்னி பஸ்களில் கட்டண தொடர்பாக ஆய்வு செய்ய போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வேலூர் போக்குவரத்து சரக்கத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் உள்ள டோல்கேட்களில் போக்குவரத்து துணை ஆணையர் நெல்லையப்பன் தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கடந்த 10 ம் தேதி முதல் 12 ம் தேதி நேற்று இரவு வரை சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், நான்கு மாவட்டத்தில் நடத்திய சோதனையில் 255 ஆம்னி பஸ்களில் சோதனை செய்யப்பட்டது. இதில் 31 ஆம்னி பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகள் மீறியும் உரிய அனுமதி இன்றியும் இயங்கியதால் அந்த வாகனங்களுக்கு 1 லட்சத்து 71 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும், அதிக கட்டணம் கொள்ளை மற்றும் விதிவிரல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • RJ Balaji Apologizes to Sivakarthikeyan சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே.பாலாஜி…எதற்குனு தெரியுமா..?
  • Views: - 648

    0

    0