பரபரப்பாக காணப்படும் பின்னலாடை நிறுவனம்.. தொழிலாளர்கள் ஊருக்கு சென்றதால் வெறிச்சோடியது!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2024, 10:56 am

பரபரப்பாக காணப்படும் பின்னலாடை நிறுவனம்.. தொழிலாளர்கள் ஊருக்கு சென்றதால் வெறிச்சோடியது!!!

பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் மதுரை, தேனி, கிருஷ்ணகிரி, திருச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சகணக்கான மக்கள் திருப்ப்பூரிலேயே தங்கி பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

இதுதவிர திருப்பூரில் உள்ள உணவகங்கள்., மளிகை கடைகள். உள்ளிட்ட கடைகளையும் பெரும்பாலும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு திருப்பூரில் தங்கி பணியாற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் தீபாவளி மற்றும் பொங்கள் பண்டிகைகளுக்கு மட்டுமே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக , பின்னலாடை நிறுவனங்கள் செயல்படவில்லை.

மேலும், தொழிலாளர்கள் தங்கள்து சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்றதால் திருப்பூர் பிரதான சாலைகளான குமரன் சாலை., காதர் பேட்டை. அரிசி கடை விதி., பழைய பேருந்து நிலையம்., உள்ளிட்ட பகுதிளில் வாகன போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.

அதே போல் பின்னலாடை நிறுவனங்கள் அதிக அளிவில் உள்ள கொங்கு மெயின் ரோடு., சிட்கோ உள்ளிட்ட பகுதிகளிலும், சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனைக்கு பெயர் போன, காதர்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு உள்ளது.

விடுமுறை முடிந்து பெரும்பாலான தொழிலாளர்கள் இவ்வார இறுதியில் வந்த பின்னரே திருப்பூரின் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்