காவி உடையுடன் உள்ள வள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்த ஆளுநர் ஆர்.என். ரவி… பரபரப்பை கிளப்பிய ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2024, 11:14 am

காவி உடையுடன் உள்ள வள்ளுவர் படத்தை பகிர்ந்த ஆளுநர் ஆர்என் ரவி… பரபரப்பை கிளப்பிய ட்வீட்!!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காவி உடையுடன் உள்ள வள்ளுவரின் புகைப்படத்தை பகிர்ந்து ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார் .

  • கீர்த்தி முதல் நயன்தாரா வரை…தட்டி தூக்கிய ‘நெட்பிளிக்ஸ்’…கொத்தா இறங்கிய அப்டேட்கள்..!