எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் உற்சாகம்.. பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய முன்னாள் எம்எல்ஏ!!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2024, 10:44 am

எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் உற்சாகம்.. பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய முன்னாள் எம்எல்ஏ!!

அதிமுக நிறுவனர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா அவரது திருவுருவு சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் முன்பாக இன்று அதிமுக முன்னாள் முதல்வரும் நிறுவனருமான டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான சிறுணியம் பலராமன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா ஆகியோர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கியும் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். இதில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகரக் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?