பெண் பக்தர்களிடம் சில்மிஷம்… போதை ஆசாமிக்கு தர்மஅடி ; பழனி முருகன் கோயிலில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan17 January 2024, 4:20 pm
பழனி கோயிலுக்கு வந்த பெண் பக்தர்களிடம் சில்மிசம் செய்த நபரை அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாததிரையாக வந்த வண்ணம் உள்ளனர். காலை நேரத்தில் பாதயாத்திரை ஆக வந்த ராமநாதபுரத்தைச் சார்ந்த பெண் பக்தர்கள் வந்துள்ளனர்.
அப்போது, மலைஅடிவாரம் செல்லும் பாதையில் சாலை ஓரத்தில் இருந்த போதை ஆசாமி, தகாத வார்த்தைகளால் பேசியும், பெண் பக்தர்களிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
சில்மிஷம் செய்த நபரை பெண் பக்தர்கள் சேர்ந்து தர்மஅடி கொடுத்து காவல் துறையினரை அழைத்து ஒப்படைத்தனர். பாதி போதையில் இருந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி கோவில் பெண் பக்தரிடம் சில்மிஷம் செய்த நபருக்கு தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.