லிப்ட் கேட்டு பைக்கில் ஏறி சென்ற பெண் யானை மிதித்து பலி.. ஆக்ரோஷமாக சாலையை கடந்து செல்லும் யானையின் காட்சிகள் வைரல்!
Author: Udayachandran RadhaKrishnan17 January 2024, 4:42 pm
லிப்ட் கேட்டு பைக்கில் ஏறி சென்ற பெண் யானை மிதித்து பலி.. ஆக்ரோஷமாக சாலையை கடந்து செல்லும் யானையின் காட்சிகள் வைரல்!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை காட்டு யானை தாக்கியதில்: பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்: பெண்ணை கொன்ற காட்டு யானை சாலையை கடந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி – கெலமங்கலம் சாலையில் அனுமந்தபுரம் என்ற கிராமத்தில் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற முனிரத்தினா 35 என்ற பெண் சென்றுக்கொண்டிருந்தார்
அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை சாலையை கடக்க காத்திருந்த காட்டுயானை ஒன்று பெண்ணை துரத்தி தாக்கியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் பெண்ணை தாக்கி கொன்ற காட்டு யானை அப்பகுதியில் சாலையை கடந்து அருகே உள்ள வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை நேரத்தில் பணிக்காக சென்ற பெண்ணை காட்டுயானை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது