போதும் இதோட நிறுத்திக்கிறேன்.. பிரேமம் பட இயக்குநரின் பகீர் பதிவு..!

Author: Vignesh
18 January 2024, 12:29 pm

நேரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படமே மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதை தொடர்ந்து, இவர் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் அளவில் வெற்றி அடைந்த திரைப்படம் தான் பிரேமம்.

alphonse puthren

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் படம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சரி நம் மனதில் இருந்து நீங்காத இடம் பிடித்து விட்டது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த கோல்ட் திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

Alphonse-Puthren-

இந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக தான் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என்று கூறி இருந்தார். இயக்குனர் அல்போன்ஸுக்கு ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதாக அவரே அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் இனிமேல் திரைப்படங்கள் இயக்கப் போவதில்லை என அறிவித்திருந்தார். இந்நிலையில், சமீபகாலமாக அல்போன்ஸ் புத்திரன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் நடிகர், நடிகர்களை குறித்து சர்ச்சை கூறிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

alphonse puthren

இதனிடையே, தற்போது அல்போன்ஸ் புத்திரன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் அவர், “இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கத்தில் எந்த ஒரு பதிவையும் பதிவிட போவதில்லை என்றும், அதற்கு காரணம் என்னவென்றால் நான் சோசியல் மீடியாவில் பதிவிடும் பதிவுகள் என் அப்பா, அம்மா மற்றும், தன்னுடைய சகோதரிக்கு பிடிக்கவில்லை என்றும், என் உறவினர்கள் அவர்களை பயமுறுத்திக்கிறார்கள்” எனவே, “நான் அமைதியாக இருந்தால் எல்லாரும் நிம்மதியாக இருப்பார்கள் என நினைக்கிறேன், அப்படியே இருக்கட்டும்” என்று இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டு உள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 353

    0

    0