சூப்பர் ஃபிகர் வருது பாரு.. பிரபல நடிகையை வர்ணித்து தள்ளிய அஜித்..!

Author: Vignesh
18 January 2024, 3:30 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் பெஞ்சமின் அஜித் குறித்து பேசியுள்ளார். அதில், நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருப்பார். ஆனால், அஜித் எதிர்மறையானவர். திருப்பதி படத்தின் போது நாங்கள் நான்கு நண்பர்கள். எங்களிடம் தான் அஜித் வருவார். நாலு சார் போட்டு உட்கார்ந்து, வீட்டில் இருந்து பிரியாணி சமைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்று சொல்லுவார்.

Benjamin

தினமும் சாப்பாடு எடுத்துட்டு வருவார். கலகலன்னு காமெடி பண்ணிக்கிட்டே இருப்பார். ஒருமுறை படத்தின் ஹீரோயின் நடிகை சதா வந்திருப்பதை பார்த்து பெஞ்சமின் சூப்பர் பிகர் வருது பாரு என்றார். என்ன சார் என்று கூச்சத்துடன் நான் கேட்டதற்கு ஃபிகர் தானே அவங்க என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட ரசிகர்கள் அஜித்தா இப்படி பேசியது என்ற என விமர்சித்து வருகிறார்கள்.

ajith
  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…