இணையத்தில் லீக் ஆன சூர்யாவின் “கங்குவா” பட ஸ்டில் – தீயாய் பரவும் போட்டோ!

Author: Rajesh
18 January 2024, 4:49 pm

பிரபல நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகனான சூர்யா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பித்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட், துணை ஹீரோ போன்ற திரைக்கதைகளில் நடிக்கத் தொடங்கிய இவர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், மௌனம் பேசியதே போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

விஜய், அஜித் இணையாக போட்டியாக வலம் வரும் சூர்யா, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், மாற்றான் போன்ற திரைப்படங்கள் மூலம் செம பிரபலம் அடைந்தார். குறிப்பிட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் நடித்து வெளியான ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்கள் இவரை இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

செலக்ட்டீவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். கற்பனை கதைக்கொண்ட வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தில் திஷா பட்டாணி, யோகி பாபு, நடராஜன், ரெடின், கோவை சரளா, ரவிக்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படமானது இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஸ்டில் ஒன்று இணையத்தில் லீக்காகி தீயாய் பரவி வருகிறது. அந்த போட்டோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் 3டி தொழில் நுட்பத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. .

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?