ஆண்ட்ரியாவுக்கும் எனக்கும் அது தான் பிரச்சனையே.. நீண்ட நாள் ரகசியத்தை உடைத்த அனிருத்..!
Author: Vignesh18 January 2024, 5:32 pm
கமல் ஹாசன் ரொமான்ஸ் லிஸ்ட்டிலும் காதல் லிஸ்ட்டிலும் அவரையே மிஞ்சிய அளவிற்கு பேசப்பட்டவர் தான் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அனிருத் முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கே சென்றுவிட்டார்.
அனிருத் ரவிச்சந்தர் பக்கா பிளேபாயாக ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் சுசி லீக்ஸ் லீக் புகைப்படங்களால் படாத பாடு பட்டு அவதிப்பட்டவர்.
அதேபோல் அனிருத் ரவிச்சந்தர் பலருடன் கட்டியணைத்த படி இவர் எடுத்த புகைப்படங்களும் இணைத்தில் வேகமாக வைரலாகியது. அந்தவகையில் அனிரூத் பிராக்கெட் போட்ட ஆண்ட்ரியா குறித்தும் காதல் முறிவு குறித்தும் பிரபலம் ஒருவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.
அனிருத் சில வருடங்களுக்கு முன் நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருந்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து சர்ச்சையில் சிக்கியது.
இந்நிலையில், இவர்கள் பிரிந்தது தொடர்பாக அனிருத் பேசிய வீடியோ இணையத்தில் தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றது. அதில், அனிருத் சினிமாவிற்கு வந்த போது அவருக்கு வயது பெறும் 19 தான் அந்த சமயத்தில் ஆண்ட்ரியாவிற்கு வயது 25 வயது வித்தியாசமே அவர்களின் காதல் முறிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தன்னை விட 6 வயது அதிகமான பெண்ணான ஆண்ட்ரியாவின் வயதே தங்களுக்கு தடையாகிவிட்டதாக அனிருத் குறிப்பிட்டிருந்தார்.
#Anirudh About Breakup With #Andrea pic.twitter.com/rOCvqqAgoO
— chettyrajubhai (@chettyrajubhai) June 22, 2022
அந்த புகைப்படங்கள் வெளியான சமயத்தில் அனிருத்தின் குடும்பத்தினர் வயது அதிகம் உள்ள பெண்ணை திருமணம் செய்வதா என்று அனிருத்தின் காதலுக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருந்து உள்ளனர். இந்த நேரம் இந்த காதல் எல்லாம் மூன்று மாதங்கள் கூட தாங்காது என்று அனிருத்தின் தந்தை அப்போதே எச்சரித்தாராம். மேலும், ஆண்ட்ரியா பற்றி பல வதந்திகளும் வெளியானது. அனிருத் ஆண்ட்ரியா இடையேயான கருத்து வேறுபாடுக்கு முக்கியகாரணமாக அமைந்து இருவரும் பிரிந்து விட்டனர்.