சரண்யாவின் முதல் கணவர் இவரா? பொண்வண்ணனை மறுமணம் செய்து வைத்ததே இவர் தான்!
Author: Rajesh19 January 2024, 2:44 pm
ISO முத்திரை பதித்த அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தென்னகத்து மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்து வருகிறார். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்து ஆரம்பத்தில் 1980களில் ஹீரோயினாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
பின்னர் திருமணத்திற்கு பின்ன சில ஆண்டுகள் சினிமாவிற்கு கேப் விட்டிருந்த அவர் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் ஹீரோக்களின் அம்மா வேடத்தில், நடித்து பெரும் புகழ் பெற்றார். அப்படி அவர் அம்மாவாக நடித்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படங்கள் ராம், தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி, வேலையில்லா பட்டதாரி, கிரீடம், தெனாவட்டு உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது.
இதனால் சரண்யா பொன்வண்ணன் சிறந்த அம்மா நடிகையாக பல விருதுகளை வாங்கியுள்ளார். மேலும் அவர் சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த டைலர் தொழில் செய்து வருகிறார். இவர் 1989ம் ஆண்டு நடிகரும் திரைப்பட இயக்குனருமான ராஜசேகர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
அவர் குடி பழக்கத்திற்கு அடிமையானதால் சரண்யாவுக்கு அவருடன் கருத்து வேறுபாடுஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின்னர் பெற்றோர் பார்த்து வைத்த பொன்வண்ணனை திருமணம் செய்துக்கொண்டார். கருத்தம்மா படத்தில் நடித்த போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த பொன்வண்ணனை சரண்யாவுடம் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்ததே பாரதி ராஜா தானாம். சரண்யாவின் பெற்றோரிடம் பேசி முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.