ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. தமிழகத்தில் பொது இடங்களில் நேரலை செய்ய தடை.. வலுக்கும் எதிர்ப்பு : காரணம் இதுதான்?!!

Author: Udayachandran RadhaKrishnan
21 January 2024, 5:05 pm

ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. தமிழகத்தில் பொது இடங்களில் நேரலை செய்ய தடை.. வலுக்கும் எதிர்ப்பு : காரணம் இதுதான்?!!

தமிழகத்தில் பொது இடங்களில் ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலை செய்ய அனுமதியில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலையை திருமண மண்டபம், பொது இடங்களில் நேரலை செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் அறக்கட்டளை கோயில்கள், மடங்களில் ராமர் கோவில் நிகழ்ச்சியை நேரலை செய்யலாம். மேலும் கோயில்களில் அறங்காவல் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் நேரலை ஒளிபரப்பு தமிழக அரசு தடை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Madha Gaja Raja Release Date Announced 12 வருடம் காத்திருப்பு… ரிலீசாகும் மதகஜ ராஜா… ஆனந்த கண்ணீரில் பிரபலம்!
  • Views: - 383

    1

    0