தங்க நகைகளுடன் தலைமறைவான நகைப்பட்டறை தொழிலாளி… ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை ; இளைஞருக்கு வலைவீச்சு..!!

Author: Babu Lakshmanan
22 January 2024, 2:02 pm

கோவையில் தங்க நகைகளுடன் தலைமறைவான நகை பட்டறை தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை கடைவீதி அடுத்த சாமி அய்யர் புது வீதி பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரின் மகன் கார்த்திகேயன் (30). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.

இவரது நகை பட்டறையில் சலீவன் வீதி பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லிங்கேஸ்வரன் நகை பட்டறையை பூட்டிவிட்டு அதன் சாவியை உரிமையாளர் கார்த்திகேயன் இடம் கொடுக்காமல் வைத்திருந்தார்.

நேற்று அதிகாலையில் லிங்கேஸ்வரன் நகை பட்டறையை திறந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த 31″லட்சத்து 80″ ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 530 கிராம் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார். நேற்று காலை கார்த்திகேயன் தனது நகை பட்டறைக்கு சென்ற போது, இந்த விபரம் தெரிய வந்தது. இதனால், அதிர்ந்து போன அவர், கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் சலிவன் வீதி பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தங்க நகைகளுடன் தலைமறைவான லிங்கேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 240

    0

    0