பிரதமர் மோடிக்கு சல்யூட்… இது உங்களின் மற்றொரு மகத்தான சாதனை ; ராமர் கோவில் திறப்புக்கு நடிகர் விஷால் வாழ்த்து..!!!

Author: Babu Lakshmanan
22 January 2024, 2:52 pm

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. நண்பகல் 12.20 மணியளவில் ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டுள்ள துணியை அகற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள பால ராமருக்கு பிரதமர் மோடி விசேஷ பூஜைகளை செய்தார். பின்னர், பாதங்களில் தாமரை மலர்களை தூவியும் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தார்.

இதனையடுத்து, அயோத்தி கோவிலில் குழந்தை ராமர் எழுந்தருளினார். பின்னர், சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து ராமரை வழிபட்டார். பின்னர், கோவிலில் இருந்த ஆன்மீகவாதிகளுக்கு பரிசுகளை வழங்கியதுடன், அவர்களிடமும் ஆசியும் பெற்றார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அயோத்தி நகரமே அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டுள்ளன.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்களும், ரஜினிகாந்த், விக்கி கௌசல், கத்ரினா கைஃப், ரன்பீர் கபூர், அலியா பாட், ராம் சரன், சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள் உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.

மேலும், நேரில் வர இயலாத பிரபலங்கள் சமூகவலைதளங்களில் வாயிலாக தங்களின் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் விஷால் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதாவது, “வாழ்த்துக்கள், மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர்களே, உங்களின் மற்றொரு சிறந்த சாதனை.
இந்த மகத்தான தருணத்திற்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த அனைவருக்கும் ராமர் கோவில் பல ஆண்டுகளாக நினைவுகூரப்படும். சல்யூட், கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 424

    0

    0