ரஜினி To ஆலியா பட் வரை .. அயோத்தி ராமர் கோவிலுக்கு படையெடுக்கும் சினிமா பிரபலங்கள்..!

Author: Vignesh
22 January 2024, 2:47 pm

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா இன்று 22-ம் தேதி நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஏரளாமானோர் பங்கேற்றனர். இந்த ஆன்மீக விழாவில் பங்கேற்க லட்ச கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அயோத்தி நகரமே விழா கோலமாக காட்சி அளிக்கிறது.

மேலும், இந்த கோவில் திறப்பு விழாவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் அண்ணனுடன் புறப்பட்டு சென்றார். அதேபோல், தனுஷ் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் சென்றுள்ளார். மேலும், பாலிவுட்திரை உலகில் இருந்து அமிதாப்பச்சன், ஆலியா பட், ஆயுஷ்மான் குரானா, கங்கனா ரனாவத், விக்கி கவுசல், கேத்தரினா கைஃப், இயக்குனர் ரோஹித் ஷெட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு சென்றுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் தற்போது, வெளியாகி வருகிறது. மேலும், தெலுங்கு திரையுலகில் இருந்து நடிகர் சிரஞ்சீவி தனது மகன் ராம்சரண் மற்றும் மனைவியுடன் தனி விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ள வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அதுவும் வைரலாகி வருகிறது.

முன்னதாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்றுள்ளனர். அங்கிந்து எடுக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?