விவாகரத்து ஆனவரை கரம் பிடிக்கப்போகும் அனுஷ்கா…. தீயாய் பரவும் திருமண செய்தி!

Author: Rajesh
23 January 2024, 8:30 pm

நல்ல அழகு, திறமையான நடிப்பு என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வசீயம் செய்து வைத்திருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. கர்நாடகாவை சேர்ந்தவரான இவர் யோகா டீச்சராக தனது கெரியரை துவங்கினார். அதன் பின்னர் பின்னணி பாடகியாக சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்து வருகிறார்.

2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் -நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படம் தான். அதன் பின்னர் 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி தாராளமாக காட்டி நடித்த அனுஷ்கா அருந்ததி திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

மரியாதை மிக்க அப்படத்தில் நடித்த பிறகு கவர்ச்சியை ஏறகட்டிவிட்டு அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது. தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர் வரலாற்று வெற்றி திரைப்படமான பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலம் ஆனார்.

அந்த படத்தில் நடித்தபோது பிரபாஸ் உடன் காதல் வயப்பட்டு சில வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். இதனிடையே அனுஷாகாவிற்கு பெற்றோர்கள் வேறொறு தொழிலதிபரை வரன் பார்க்க பணத்திற்காக பிரபாஸை கழட்டிவிட்டு சென்றார். ஆனால், பிரபாஸ் விட்ட சாபமோ என்னவோ இதுவரை அவருக்கு திருமணம் ஆகவே இல்லை.

இந்நிலையில் அனுஷ்காவின் திருமண செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. ஆம், நடிகை அனுஷ்கா கன்னட சினிமாவின் திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஒருவரை திருமணம் செய்யவுள்ளாராம். அந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் என பேசப்படுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 400

    1

    0