மீண்டும் அம்மாவான ஸ்ரீதேவி…. சிம்பிளான சீமந்த வீடியோ இணையத்தில் வைரல்!

Author: Rajesh
24 January 2024, 7:13 am

தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் சீரியல் நடிகை ஸ்ரீ தேவி. இவர் “புதுக்கோட்டையில் இருந்து சரவணன்” படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தார்.

அதன் பின்னர் சீரியல்களில் வாய்ப்புகள் கிடைக்க அதை தவிர விடாமல் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துவிட்டார். சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீதேவி செல்லமடி நீ எனக்கு, தங்கம், இளவரசி, கஸ்தூரி , பிரிவோம் சந்திப்போம், கல்யாணம் முதல் காதல் வரை, ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

இதனிடையே அவர் தனது நீண்ட நாள் காதலரான அசோக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சித்தாரா என்கிற அழகிய பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருக்கும் ஸ்ரீதேவிக்கு கணவர் அசோக் சிம்பிளாக சீமந்தம் நடத்தி அழகு பார்த்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து கியூட்டாக நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிட அது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ:

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu