உதயமாகும் புதிய மாவட்டம்… தமிழகத்தில் 39வது மாவட்டம் உருவாகிறது : வெளியாகும் புதிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2024, 4:48 pm

உதயமாகும் புதிய மாவட்டம்… தமிழகத்தில் 39வது மாவட்டம் உருவாகிறது : வெளியாகும் புதிய அறிவிப்பு!!

மக்கள்தொகையை கருத்தில் கொண்டு நிர்வாக வசதிகளுக்காக மாவட்டங்களை பிரிக்க வலியுறுத்தும் கோரிக்கைகள் அதிகரித்தன. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து ஆரணியை தனி மாவட்டமாக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனி தனி மாவட்டம், கோவை மற்றும் திருப்பூரை பிரித்து பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க கோரிக்கை உள்ளது. அது போல் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்டோர் நகரங்களை கொண்டு புதியதொரு மாவட்டம் உருவாக கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவள்ளூரை பிரித்து பொன்னேரி மாவட்டமாக்கவும் கோரிக்கை எழுந்ததது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக புதிய மாவட்டம் அறிவிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த கோரிக்கையை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயஸாளர் கோரிக்கை விடுத்திருந்தார். மக்களும் அவ்வண்ணமே விரும்பினர். மண்டலவாரியாக பார்த்தசால் வடக்கு மண்டலத்தில் ஆரணி, விருத்தாசலம், ஓசூர், பொனே்னேரி, மத்திய மண்டலத்தை பொருத்தமட்டில் கும்பகோணம், மணப்பாறை, மன்னார்குடி், மேற்கு மாவட்டத்தை பொருத்தமட்டில் பொள்ளாச்சி, பழனி, ஆத்தூர் அல்லது எடப்பாடி தெற்கு வண்டலத்தை பொருத்தவரை கமுதி, மேலூர், திருச்செந்தூர் அல்லது கோவில்பட்டி, சங்கரன்கோவில் ஆகிய மாவட்டங்களை பிரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் நாளை மறுநாள் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஆத்தூர் மாவட்டம் தனியாக உதயமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலம், எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சங்கரிரி ஆகிய 5 தாலுக்காக்களும் ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கங்கவள்ளி ஆகிய 5 தாலுக்காகளுடன் ஆத்தூர் மவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 25742

    17

    6