மேற்கு வங்க முதலமைச்சர் சென்ற கார் விபத்து.. காயத்துடன் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2024, 5:59 pm

மேற்கு வங்க முதலமைச்சர் சென்ற கார் விபத்து.. காயத்துடன் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி!!

கொல்கத்தாவில் இருந்து 102 கிமீ தொலைவில் உள்ள புர்பா பர்தமான் என்ற இடத்தில் நிர்வாக மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சென்றிருந்தார். பர்தவானில் இருந்து கொல்கத்தாவிற்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்த போது கார் விபத்திற்குள்ளானது. மம்தா டிரைவரின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கான்வாய் முன்பு திடீரென மற்றொரு கார் வந்ததால், அந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போடப்பட்டதில் மம்தா காரின் கண்ணாடியில் மோதியதில் விபத்திற்குள்ளானார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மம்தா பானர்ஜி கொல்கத்தாவிற்கு அழைத்து வரப்படுகிறார் என்றும், மருத்துவர்களால் அவர் பரிசோதிக்கப்படுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் புறப்பட முடியாமல் காரில் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின்போதும் மம்தாவுக்கு இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 323

    0

    0