Royal Enfield பைக் ஓட்டி அசத்தியுள்ள நடிகை KR.விஜயா.. வைரலாகும் UNSEEN புகைப்படம்..!

Author: Vignesh
25 January 2024, 11:05 am

70, 80களில் தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், மொழி படங்களில் கலக்கிய நடிகைகளை இப்போதும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அந்த காலத்தில் படைப்புகள் இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

k r vijaya

அப்படி 60, 70களில் டாப் நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை கே ஆர் விஜயா. இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இவர் நடித்து புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டார்.

k r vijaya

தந்தையின் விருப்பத்திற்காக நடிப்பில் களமிறங்கிய கே ஆர் விஜயா 1963ஆம் ஆண்டு வெளியான கற்பகம் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். குறுகிய காலத்தில் முன்னணி டாப் நடிகையாக வலம் வந்த கே ஆர் விஜயா தென்னிந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

k r vijaya

60 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துவரும் கே.ஆர். விஜயாவின் இதுவரை பார்த்திராத புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது பிரபலமாக பயன்படுத்தப்படும் வரும் ராயல் என்ஃபீல்டு பைக்கை 70 களிலே ஒட்டி அசத்தியுள்ள நடிகை கே ஆர் விஜயா அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

k r vijaya
  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!