சமந்தாவை ஓரங்கட்டும் திரையுலகம்? வாரிசு நடிகைக்கு நழுவி சென்ற படவாய்ப்பு!

Author: Rajesh
25 January 2024, 6:23 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

samantha

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

shruti haasan

இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு கிடைத்த மிகப்பெரிய படவாய்ப்பு பறிபோய்விட்டது. ஆம் பிரபல ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் என்பவர் இயக்கவிருந்த சென்னை ஸ்டோரி என்ற சர்வதேச படத்தில் தான் சமந்தா நாயகியாக நடிக்க ஒப்பந்தமான நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறாராம். மேலும், இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சமந்தாவின் தொடர் தோல்விகளே இதற்கு காரணம் என திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 421

    0

    0