என் முதல் முத்தம் அந்த பிரபல நடிகருடன் தான்… ஓப்பனா கூறிய ரித்விகா!

Author: Rajesh
25 January 2024, 7:56 pm

லட்சணமான தமிழ் பெண்ணான நடிகை ரித்விகா கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த திரைப்படத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு அறிமுக நடிகை என்பதை வியப்புடன் பார்க்க வைத்தார்.

அந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார். தொடர்ந்து பரதேசி, ஒரு நாள் கூத்து, கபாலி, இருமுகன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து மேலும் பிரபலம் ஆகினார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு டைட்டில் வென்றார்.

தொடர்ந்து திரைப்படங்களில் அழுத்தமான ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகை ரித்விகா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முதல் முத்த அனுபவம் யார் உடன் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். நான் மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்தபோது எனக்கு ஜோடியாக நடித்த நடிகர் கலையரசன் உடன் அந்த பிரபலமான ரொமான்டிக் காட்சியில் அவர் கொடுத்த முத்தம் தான் என் முதல் அனுபவம் என கூறினார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…