சென்னையில் தேசிய கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்என் ரவி ; முப்படைகளின் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார்!!
Author: Babu Lakshmanan26 January 2024, 9:15 am
75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..
நாடு முழுவதும் 75வது குடியரசு தினம் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, முப்படையினர், காவல்துறையினர், மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ரவி ஏற்றுக் கொண்டார். பின்னர், பல்வேறு குழுக்களின் நாட்டியம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகார்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, வீரதீர செயல்களுக்கான விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.