அதிகாரிகளை அவமதித்தாரா மேயர் பிரியா? குடியரசு தின விழாவில் முகம் சுழிக்க வைத்த செயல்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2024, 5:36 pm

அதிகாரிகளை அவமதித்தாரா மேயர் பிரியா? குடியரசு தின விழாவில் முகம் சுழிக்க வைத்த செயல்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!

சென்னையில் காமராஜர் சிலை அருகே குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து தமிழக முதல் -அமைச்சர் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இதனைத்தொடர்ந்து சென்னை பள்ளி மாணவ, மாணவிகளின் சாரண, சாரணியர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றது. பின்னர் நிகழ்ச்சியில் அதிகாரிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மேயர் பிரியா ஆகியோர் வழங்கினர்.

அப்போது மேயர் பிரியா அதிகாரிகளுக்கும் சான்றிதழ் வழங்கும் போது உடனே தனது கைப்பேசிக்கு வந்த போன்காலுக்கு பதில் பேசிக் கொண்டிருந்தார். பதக்கங்களை வழங்காமல் செல்போனில் அலட்சியமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் மேயர் பிரியாவின் இந்த செயல் முகம் சுழிக்க வைத்தது. பரிசு, பதக்கங்களை வாங்க வந்த அதிகாரிகளையும், பரிசு கொடுக்கும் ஆணையாளரையும் மேயர் அவமானப்படுத்துவது போலவும் அமைந்திருந்தது.

ஒரு மேயர் என்ற பொறுப்பை மேயர் அவமானப்படுத்துகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேயர் பிரியாவின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!