குடியரசு தின விழா.. ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடைகளை வழங்கி கவுரவித்த கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கம்!
Author: Udayachandran RadhaKrishnan26 January 2024, 6:54 pm
குடியரசு தின விழா.. ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடைகளை வழங்கி கவுரவித்த கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கம்!
குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கம் சார்பில் முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
கோவையில் உள்ள ST Joseph Old Age Homeல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் தலைவர் R. உதயகுமார், KCP Infra Limited நிறுவனத்தின் தலைவரும், கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளருமான K.Chandrprakash ஆகியோர் தேசியக் கொடி ஏற்றி வைத்து முதியோர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் தலைவர் உதயகுமார், Old Age Home சுத்தமாகவும், சுகாதாரமாக இருப்பதாகவும் இல்ல நிர்வாகிகளை பாராட்டினார்.
பின்னர் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் தலைவர் R. உதயகுமார், செயலாளர் K. Chandrprakash, பொருளாளர், துணைத் தலைவர், துணைச் செயலாளர், துணைப் பொருளாளர் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.