பத்திரிக்கையாளர் மீது கொடூரத் தாக்குதல் சம்பவம்… 2 குற்றவாளிகளுக்கு கால்முறிவு… கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

Author: Babu Lakshmanan
27 January 2024, 5:01 pm

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த தனியார் செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசப் பிரபு, வழக்கம் போல செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். கடந்த 24ம் தேதி இரவு அவரது வீட்டை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள், நேசபிரபுவை சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது.

பலத்த காயங்களுடன் நேசப்பிரவு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே, பிரவீன் மற்றும் சரவணன் ஆகிய 2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது அவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், குற்றவாளிகள் இரண்டு பேரையும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் போலீசார் தற்போது சேர்த்துள்ளனர்.

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…