இன்னும் 40 நாட்கள்தான்.. என் மண் என் மக்கள் யாத்திரையில் தேதியுடன் அண்ணாமலை முக்கிய அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2024, 10:53 am
இன்னும் 40 நாட்கள்தான்.. என் மண் என் மக்கள் யாத்திரையில் தேதியுடன் அண்ணாமலை முக்கிய அறிவிப்பு!
விழுப்புரம் நகர பகுதியான காந்தி சிலையிலிருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நான்கு முனை சந்திப்பு வரை நடைபெற்றது.
இந்த பாதயாத்திரையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் அரசியல் முழுமையாக மாற்றப்பட வேண்டும் மக்களுக்கான ஒரு அரசியல் ஆளுகின்றவர்களுக்கான ஒரு அரசியலாக தமிழகத்தில் உள்ளதாகவும், ஆளுகின்றவர்களின் பிள்ளைகள் மூன்று மொழிகள் கற்று கொள்வதாகவும், ஆனால் பொது மக்களின் பிள்ளைகள் இரண்டு மொழிகள் கற்று கொள்ளும் அரசு பள்ளியில் பயிலும் நிலை தான் உள்ளதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அண்ணாமலை தமிழகத்தில் மட்டும் தான் இலாகா இல்லாத அமைச்சர் உள்ளதாகவும், விழுப்புரத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் வருமான உற்பத்தி 2.6 சதவிகிதமும், மனித வளர்ச்சி மிக குறைவான அளவே உள்ளதாக கூறினார்.
திமுக ஒரு பக்கம் மாநாடும் அவரது கூட்டணி கட்சி விசிக ஒரு பக்கம் மாநாடு நடத்தி மத்திய அரசு எதிராக பத்து தீர்மானங்கள் நிறைவேற்றுகிறார்கள் அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரக்கூடாதென்று தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இதனை கொண்டு வரவேண்டும் என்று கூறியதே திமுகவின் மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதி தான் என்றும் பட்டியலின மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பியது குறித்து திமுக கூட்டணியிலுள்ள திருமாவளவன் பேசவில்லை என குற்றஞ்சாட்டினார்.
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் பட்டியலின அமைச்சர்கள் 12 பேர் உள்ளனர் ஆனால் திமுகவில் மூன்று பேர் மட்டுமே அமைச்சராக உள்ளதாகவும்
தண்ணீரில் மலம் கலந்தது, பட்டியலின பெண் தாக்கப்பட்டது குறித்து திருமாவளவன் மாநாட்டில் தீர்மாணம் போட்டிருக்க வேண்டும் ஆனால் அதனை செய்யவில்லை எந தெரிவித்தார்.
தமிழக மக்கள் மாற்றம் வேண்டும் என்று உறுதியாக உள்ளதாகவும், திமுகவில் தொண்டர்கள் யாரும் எம் எல் ஏக்களாக ஆக்கப்படாமல் அடுத்த தலைமுறை வாரிசுகள் தான் வருவதாகவும், இந்தியாவிலையே மோசமான கட்சியும் ஆட்சியும் திமுக தான் தெரிவித்தார்.
டீ போடுபவருக்கு டீ எப்படி போடுகிறார் என்று தகுதி பார்க்கும் நாம் யார் ஆள தகுதியுடையவர்கள் என்று மக்கள் பார்ப்பதில்லை.நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வாங்கிய கையெழுத்து அட்டைகள் எல்லாம் குப்பை தொட்டிக்கு சென்று விட்டதாகவும், யார் ஒருவன் உன்மையான இந்துவாக உள்ளானோ அவன் கிருஸ்துவனுக்கும், இஸ்ஸாமியர்களுக்கு நண்பணாக இருப்பான் அதற்கு உதாரணம் தான் மோடி என பெருமிதம் கூறினார்.
இஸ்ஸாமிய சகோதர சகோதிரிகளுக்கு உண்மையான விடுதலை என்பது பாஜக ஆட்சியில் தான் கிடைக்கும் என்றும் பொன்முடி வைப்பு நிதியாக 41 கோடி ரூபாய் செலுத்தியதை அமலாக்க துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது வழக்கு என்று அவர் மீது உள்ளது அவரால் தப்பிக்கவே முடியாது என்றும் இருண்ட தமிழகத்தை பாஜக மீட்டெடுக்கும் என்றும் திமுக காரர்களே கூறுவதாக அண்ணாமலை கூறினார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என கூறினார்கள் ஆனால் இதுவரை பத்தாயிரத்து 320 பேருக்கு மட்டுமே கொடுத்துள்ளதாகவும் இவர்கள் ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற வார்த்தையை இவர்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் சாமான்யர்களுக்கான ஆட்சியாளர்கள் தமிழகத்தில் இல்லை இன்னும் 40 நாட்களில் தேர்தல் அறிவிப்புகள் வந்துவிடும் பாஜக அண்னாமலை கூறினார்.
0
0