அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு… நடிகை ரோஜாவுக்கு ஜாக்பாட்.. அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சர்!!
Author: Udayachandran RadhaKrishnan28 January 2024, 12:22 pm
அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு… நடிகை ரோஜாவுக்கு ஜாக்பாட்.. அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சர்!!
நடிகை ரோஜா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து நகரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அமைச்சர் பதவியை பெற்றார்.
இந்நிலையில் தான் அமைச்சர் ரோஜா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட மிக்ஜாம் புயல் வேளையில் அவர் மழையில் குடை பிடித்து நடனமாடியது விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைறெ உள்ளது. இந்த தேர்தலில் ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் அங்குள்ள ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.
எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா’ கூட்டணி மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெறாமல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து ஆந்திராவில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தான் ரோஜாவை அதில் களமிறக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஓங்கோல் நாடாளுமன்ற தேர்தலில் ரோஜாவை போட்டியிட வைக்க தீவிரமான பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த தொகுதியில் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மகுண்டா சீனிவாசுலு ரெட்டி என்பவர் எம்பியாக இருக்கிறார்.
இவரை மீண்டும் போட்டியிட வைக்க ஜெகன்மோகன் ரெட்டி விரும்பவில்லை.
இத்தகைய சூழலில் தான் நடிகை ரோஜாவை அங்கு களமிறக்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதாவது ரோஜா தற்போது எம்எல்ஏவாக உள்ள நகரி தொகுதியில் சொந்த கட்சியினரே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இதனால் கட்சியினரை சமாதானம் செய்ய முடிவு செய்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி ரோஜாவை மாநில அரசியலில் இருந்து டெல்லிக்கு எம்பியாக அனுப்ப திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் ரோஜாவுடனும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில முக்கிய தலைவர்களிடமும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அதற்கு அனைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் ரோஜாவும் கூட, ‛‛ஜெகன் மோகன் ரெட்டியின் இறுதி முடிவை தான் ஏற்பதாக அவர் தெரிவித்துள்ளார்” என்றார்.
இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓங்கோல் தொகுதியில் நடிகை ரோஜா போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.