4 நாட்களுக்கு முன்பு மாயமான 12ம் வகுப்பு மாணவி… கிணற்றில் சடலமாக மீட்பு ; போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
29 January 2024, 11:52 am

வேலூர் அருகே 12ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி என்பவரது மகள் அனிதா (17 ).இவர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 4 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று அனிதா சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்கொலை காரணம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?