இந்து கடவுளுக்கும், இந்துக்களுக்கும் எதிரான கட்சி திமுக தான் ; முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
29 January 2024, 12:05 pm

திமுக ஹிந்து கடவுளுக்கும் , ஹிந்துக்களுக்கும் எதிரான கட்சி என பழனியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ரவி மனோகரன் ஏற்பாட்டில் பழனியில் நடைபெற்றது. இதில் கொள்கை பரப்பு இணை செயலாளரும், நடிகையுமான விந்தியா, முன்னாள் அமைச்சரும், கழக துணை பொதுச்செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நத்தம் விசுவநாதன், அதிமுக ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி என்றும், திமுக ஹிந்து கடவுளுக்கும், ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்றும் விமர்சனம் செய்தார். நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரசும் தான் என்று கூறிய அவர், 37 பேர் எம்பி ஆக வெற்றி பெற்று நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்றும், மீண்டும் ஏன் மக்கள் ஓட்டு போடணும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

திமுக வெற்றி பெற்றால் யாருக்கும் பயனில்லை என்றும், அவர்களுடைய சொத்துக்களை பாதுகாக்கவே வெற்றி பயன்படும் என்று விமர்சித்த நத்தம் விஸ்வநாதன், தமிழருக்காக போராடும் இயக்கம் என்றால், அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று தான் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி குமாரசாமி ,முன்னாள் எம்.எல்.ஏக்கள் வேணுகோபாலு, குப்புசாபி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன்,பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது, லயன் அசோக், எம்.ஜி ஆர் கருப்புசாமி உள்ளிட்ட கழக சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…