‘என் மகள் அப்படி சொல்லல… சங்கி என்பது கெட்ட வார்த்தையே அல்ல’… நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்…!!

Author: Babu Lakshmanan
29 January 2024, 12:39 pm

சென்னை ; ஆன்மீகவாதியான அப்பாவை சங்கி என கூறுவது ஏன் என்பது ஜஸ்வர்யாவின் பார்வை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 கட்டமாக நடந்தது. தற்போது 3ம் கட்டமாக ஆந்திரா, தெலுங்கானாவில் வேட்டையன் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் ஆந்திரா மாநிலம் கடப்பாவிற்கு செல்ல விமான நிலையம் வந்தார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;- சினிமா சூட்டிங்கிற்காக செல்கிறேன். ஐதராபாத்தில் சூட்டிங் நடக்க உள்ளது. வேட்டையன் படம் நல்லா வந்து கொண்டு இருக்கிறது.

சங்கி என்றது கெட்ட வார்த்தை என்று ஐஸ்வர்யா சொல்லவில்லை. அப்பா ஆன்மீகவாதி எல்லா மதங்களையும் விரும்ப கூடியவர், அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை. படவிளம்பரத்திற்காக எதுவும் இல்லை. லால் சலாம் படம் நன்றாக வந்து உள்ளது. படத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள், என்றார்.

லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது தந்தை ரஜினிகாந்த்தை சங்கி என்ற விமர்சனங்களுக்கு இயக்குநரும், ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Dhanush Health Issue Delays Idli Kadai தனக்கு தானே ஆப்பு வைத்த தனுஷ்…”இட்லி கடை”படத்திற்கு வந்த சிக்கல்..!
  • Views: - 357

    0

    0