வைரலான பாரதி பாஸ்கர் வீடியோவால் கடும் எதிர்ப்பு : ரியாத் தமிழ் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan29 January 2024, 9:15 pm
வைரலான பாரதி பாஸ்கர் வீடியோவால் கடும் எதிர்ப்பு : ரியாத் தமிழ் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்சிகள் மூலம் பிரபலமானார். வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் தமிழர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினகராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவல் பாரதி பாஸ்கர் பேசிய வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவர் மீது கடும் விமர்சனம் எழுந்து வருகிறது.
இதனிடையே சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் செயல்பட்டு வரும் பழமையான ரியாத் தமிழ் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி மாணவர் கலை விழா நடத்தப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் விளம்பரப் படத்தை பகிர்ந்து அவரை விழா ஏற்பாட்டாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்தன.
இதையடுத்து ரியாத் தமிழ் சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மாணவர் கலை விழாவில் பங்கேற்க இருந்த பாரதி பாஸ்கர் அவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கேற்க முடியாததால், வேறு சில தமிழ் ஆளுமைகள் வைத்து கலைவிழா திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளது.